Monday, August 15, 2011

அண்ணா ...

உயிரின் நாடி ஒடுங்கி , ரத்தம் உறைந்து, இதயம் தன் துடிதுடிப்பை அடக்கிய அந்த நொடி
கூடவே இலவசமாக கண்கள் இருண்டு , காதடைத்தது, என் காலம் உறைந்து ...நடைபிணமான அந்த ஓர் நொடி
என் காதல் பூ சருகாகி என் கால்களில் விழுந்து , என் கண்ணீர் அதற்கு இறுதி அஞ்சலி செலுத்தி அடங்கிய அடுத்த நொடி
என் உயிரின் ஒவ்வோர் இழையிலும் இணைந்த உனக்கான என் காதல் , வலுக்கட்டாயமாக உருவி எடுக்கப்பட்டபோது
கண்ணீரை தவிர எதையும் பதில் தர முடியாமல் ...எனக்குள் நானே உடைந்த அந்த நொடி...
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை அடையாளம் தெரியாமல், "ஆன்டி" என்று அழைக்கும் தன் குழந்தையை கண்டு தனக்குள் குமுறி அழும்
ஒரு தாயின் வேதனையை பதிவு செய்த ஒரு நொடியை தந்தாய்
என் உயிரே , நீ என்னை உன் சகோதரனாக அழைத்த பொது