" காதலிக்காமல் இருப்பது சுலபம், மனக்கட்டுப்பாடு இருந்தால் போதும் " என்ற என் நண்பனிடம் வெளியே சிரித்து கொண்டு, மனதிற்குள் சொல்லி கொண்டேன் "என் தேவதை பார்க்கும் அந்த உயிர் போய் வரும் நொடியில் மனமாவது கட்டுபாடாவது".....
Saturday, August 22, 2009
உன்னை பார்த்து விட்டேன் என்று எப்போதும் நான் மனநிறைவு அடைந்ததில்லைஅடைய விட்டதில்லை உன் கண்கள் .....
தனியான அந்த சாலையில், நீ பேரழகாய் எனை கடந்து சென்ற நொடியை கடக்க முடியாமல் செயலற்று நிற்கிறது என் இதயம், வழக்கத்திற்கு மாறாக அது துடித்து கொண்டிருக்கிறது என்னை போல ......மறுபடியும் உன்னை பார்க்க ......
இந்த வலைப்பூ என் காதல் தேவதைக்கு சமர்ப்பணம்...
இதில் நான் எழுதும் ஏதேனும் ஒரு வார்த்தை அவள் மனதை தொடுமானால் ,
இந்த வலைப்பூவை நான் எழுதியதன் நோக்கம் நிறைவேறியது ...
இதிலுள்ள ஒவ்வோர் எழுத்தும் என் தேவதையை , அவள் அழகை வர்ணிக்க முயலும்...
அவளோடான என் காதலை விவரிக்கும்...