Wednesday, January 26, 2011

உனக்கான என் காதல்

காதல் மாதமான பெப்ரவரி 2007 ல் ஒரு அழகான மாலை, பேருந்துக்காக காத்திருக்கின்றான் அவன், எந்த ஒரு விசேஷ தன்மையும் இல்லாத அவன் முகம், ஊரில் உள்ள மற்ற 99 சதவிகித ஆண்களில் போல ஒருவன், எவள் ஒருத்தியும் நின்று காண எந்த ஒரு காரணமும் இல்லை அவனிடம், அதை பற்றி எப்போதும் அலட்டி கொண்டதில்லை அவன், காதலை பற்றி அறியும் எந்த ஒரு ஆர்வமும் காட்டியதில்லை இந்த நிமிடம் வரைக்கும்,. ஒவ்வொரு நாளையும் எப்படி கழிப்பது என்பது தான் அவனுடைய தற்போதைய கவலை, இதில் காதலை பற்றி அக்கறை பட அவனுக்கேது நேரம். நான்கு நண்பர்கள் , ஒரு சினிமா , எப்போதாவது ஒரு கம்ப்யூட்டர் கேம் இது போதும் அவனுக்கு வாழ்கையை ஓட்ட. அன்று காலை விடிந்தததிலும் எந்த ஒரு வித்தியாசத்தையும் காணவில்லை அவன், ஆனால் விதி அவனுக்கு அன்றைய தினத்தில் ஒரு மிக பெரிய மாற்றத்தை மறைத்து வைத்திருந்தது, அவள் ரூபத்தில் , அவள் ஒரு அழகிய தேவதை , எந்த ஒரு ஆடவனும் சில நிமிடம் கண் கொட்டாமல் பார்க்கும் அத்தனை தகுதியும் இருந்தது அவளிடம், விவரிக்க முடியாத அழகான கண்கள், குழந்தைத்தனம் மாறாத அழகிய சிரிப்பு , தேவதையை நினைப்பூட்டும் அவளுடைய முகம், அவளும் அந்த பேருந்தில் ஏற வேண்டும் .......இந்த கதை தொடரும்
இந்த கதையில் வரும் அவன் : நான் அவள் : நீ ...

Saturday, January 15, 2011

கடிதம்


ஒளி குறைந்த முன்னிரவு பொழுதொன்றில்
கண்டெடுக்க நேர்ந்தது அஞ்சல் செய்யப்படாத
என் பழைய கடிதமொன்றை ...

எந்த சுவாரஸ்யமும் இல்லை
அதை இப்போது வாசிப்பதில்
அது என் சொல்லபடாத காதலாய் சுமந்திருக்கிறது
என்பதை தவிர

மீண்டும் அதை
தொலைக்க முடியவில்லை என்னால்
முகம் தெரியாதவர்களால் வாசிக்கப்பட்டு
விமர்சிக்கப்படும் என்பதால்.

அழிக்கவும் மனதில்லை அதனை
என் சொல்லாத காதலின் ஒரே சாட்சியாக
இருக்கிறாது என்பதால்

இறுதியில் அதை
நானே இருத்திக்கொள்வதென முடிவானது
அதிகபட்சமாய் எந்த நம்பிக்கையையும்
என்னில் அது உண்டு பன்னவிடினும்
குறைந்தபட்சமாய் இது போன்றதொரு
அஞ்சல் செய்யபடாத கடிதம்
அவளிடமும் இருக்க கூடும் இன்னும்
என்ற நம்பிக்கையை உண்டுப்பண்ணியதற்கு ஆகவது

--- பெ. பார்த்திபன்