Saturday, January 15, 2011

கடிதம்


ஒளி குறைந்த முன்னிரவு பொழுதொன்றில்
கண்டெடுக்க நேர்ந்தது அஞ்சல் செய்யப்படாத
என் பழைய கடிதமொன்றை ...

எந்த சுவாரஸ்யமும் இல்லை
அதை இப்போது வாசிப்பதில்
அது என் சொல்லபடாத காதலாய் சுமந்திருக்கிறது
என்பதை தவிர

மீண்டும் அதை
தொலைக்க முடியவில்லை என்னால்
முகம் தெரியாதவர்களால் வாசிக்கப்பட்டு
விமர்சிக்கப்படும் என்பதால்.

அழிக்கவும் மனதில்லை அதனை
என் சொல்லாத காதலின் ஒரே சாட்சியாக
இருக்கிறாது என்பதால்

இறுதியில் அதை
நானே இருத்திக்கொள்வதென முடிவானது
அதிகபட்சமாய் எந்த நம்பிக்கையையும்
என்னில் அது உண்டு பன்னவிடினும்
குறைந்தபட்சமாய் இது போன்றதொரு
அஞ்சல் செய்யபடாத கடிதம்
அவளிடமும் இருக்க கூடும் இன்னும்
என்ற நம்பிக்கையை உண்டுப்பண்ணியதற்கு ஆகவது

--- பெ. பார்த்திபன்

No comments:

Post a Comment