பள்ளிக்கு செல்லும் அக்காவை பார்த்துவிட்டு
' இன்னைக்கே என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போ '
என அடம்பிடித்தது குழந்தை
'நாளைக்கு போகலாம்'
சமாதானம் சொன்னாள் அம்மா .
'அப்படீனா என்னை இன்னைக்கே நாளைக்கு கூட்டிட்டு போ'
என்றது குழந்தை
திடுக்கிட்டது காலம்...
......ப . உமா மகேஸ்வரி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment