
தெரிந்து செய்தாயோ , தெரியாமல் செய்தாயோ கண்ணே
இதயம் நொறுங்கி சிதறி போகும் வலி
கண்ணீரை தாண்டிய சோகம் என் நெஞ்சடைக்க
வாழவும் விருப்பம் இன்றி தவித்து போகிறேன்
காதலை மறுத்திருந்தால் கூட வலி தாங்கியிருப்பேன்
அந்த ஒரு வார்த்தையில் நீ கொன்றது காதலை மட்டுமல்ல
அது வியாபித்திருந்த இதயத்தோடு என்னையும் தான்
உன்னை தவிர வேறொன்றும் தெரியாத எனக்கு
நீ கொடுத்த இந்த வலி கொடிதினும் கொடிது
எனினும் , அந்த வலியையும் நெஞ்சினுள் அடக்கி ,
என் கண்ணீரை நீ காணமல் மறைத்து , புன்சிரிப்பு ஒன்றை
வலிந்து முகத்தில் கொணர்ந்து கேட்கிறேன்....
" ஒரு நொடி கூடவா காதல் வரவில்லை என் மீது உனக்கு...?"
இந்த என் கேள்விக்கு , நீ ஆமென்றால்
எங்கோ பொய் வாழ்ந்து கொள்வேன், உன் நினைவுகளோடு
நீ இல்லை என்றால் , கடவுளிடம் கேட்பேன்...
"காதலிக்க தகுதி இல்லாத எனக்கெல்லாம் ,
தேவையா இந்த உயிர் என்று ...?"

No comments:
Post a Comment